
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி தன்னுடைய x பக்கத்தில் பல்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் சென்னை அணியை கிண்டல் அடிப்பது போன்று பதிவிட்டு வருவது சிஎஸ்கே அணி மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு பதிவில் விஜய் சேதுபதியின் புகைப்படத்தை வெளியிட்டு Done and Dusted என்ற பதிவிட்டுள்ளனர். அதன் பிறகு மற்றொரு பதிவில் நடிகர் விஜயின் புகைப்படத்தை வெளியிட்டு சென்னை அணிக்கு எதிராக ஐந்தாவது முறை வெற்றி பெற்றுள்ளோம் என்று பதிவிட்டுள்ளனர். இது தவிர தங்களுடைய புள்ளி பட்டியலை வெளியிட்டு 7-வது இடத்திற்கு முன்னேறியதற்கு தல (தோனி) தான் காரணம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் பஞ்சாப் அணியின் இந்த கிண்டலான பதிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Our position in the points table! 😌
Thala for a reason! 👀 pic.twitter.com/nKWjZFm10u
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024
Done and dusted..🔥#CSKvPBKS pic.twitter.com/TtkkCgdqFf
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024
5⃣th consecutive win against CSK! ❤️🔥#CSKvPBKS https://t.co/yz77oOlLCS pic.twitter.com/gif6BklpEW
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024