
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த விவசாயியான மணிகண்டன் என்பவரும் அவருடைய எலுமிச்சை தோட்டத்தில் சடலமாக கிடந்தார்.
இதனையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வனத்துறையினர் ஆய்வு செய்ததில், கரடி தாக்கி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையை பீதியை ஏற்படுத்தியுள்ளது.