
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி புனிதா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜனும் புனிதாவும் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கியதால் அதிக கடன் சுமை ஏற்பட்டது. அந்த கடனை அடைப்பதற்காக ஆன்லைன் செயலியில் 10 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது.
ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த புனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.