
மதுரை மாவட்டம் அள்ளிக்கொண்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(41). இவரது மூத்த மகன் பாண்டி(17) உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பாண்டி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மேடை அருகே இருந்த மின் கம்பியில் பாண்டியின் உடல் உரசியதாக தெரிகிறது.
இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.