தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது கௌசல்யா வீட்டில் காய வைத்திருந்த மிளகாயை எடுக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் பயங்கரமான  மின்னல் தாக்கி கௌசல்யா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.