
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கீழாண்டை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினரின் 2-வது மகன் திலீப்(27) சென்னை ஆவடி பாட்டாலியனில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் திலீப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த திலீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலீப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.