டெல்லியில் சாணக்கியபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராவத். இவர் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார். இந்த நிலையில் ஜிதேந்திர ராவத் சாணக்கியபுரி பகுதியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நாட்களாக ஜிதேந்திர ராவத் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜிஜேந்திர ராவத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜிதேந்திர ராவத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.