
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு பொது மேடை நிகழ்ச்சியின் போது காலேஜ் படிக்கும் போது கள்ளு குடிப்பேன் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது எங்க பெரியப்பா எங்க காலேஜ் வாசலில் கள்ளு கடை வைத்திருப்பார். நாங்க காலேஜுக்கு போகும் போதும் குடிச்சிட்டு தான் போவோம் வரும்போதும் குடிச்சிட்டு தான் வருவோம். நாங்க காலேஜில் படிக்கிறதே கிடையாது. கள்ளு குடிப்பது மற்றும் கபடி விளையாடுவது இதுதான் எங்க வேலை என்று கூறுகிறார்.
இதற்கு பலரும் கண்டனங்களை கூறுகிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதியாக இருப்பவர் மக்களை நல்வழி படுத்த வேண்டுமே தவிர இப்படிப்பட்ட கருத்துக்களை கூறக்கூடாது. மேலும் அவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதையில் ஊக்குவிக்கும் பொருட்டு இப்படி பேசுகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவிக்கிறார்கள். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram