
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் நிலையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி வருகிறார். இவருக்கு ஷேக் உசேன் என்ற 25 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில்அந்த வாலிபர் சம்பவ நாளில் தன் காதலியிடம் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதால் அதில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதை உண்மை என நம்பி அந்த மாணவியும் வாலிபர் வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.
அதோடு வாலிபருடன் அவருடைய வீட்டில் அந்த மாணவியுடன் படிக்கும் சிந்தலா பிரபுதாஸ், ஓவியர் ஷேக் கலி சைதா ஆகியோரும் இருந்துள்ளனர். இது பற்றி மாணவி அவர்களிடம் கேட்டபோது அந்த மாணவியை அவர்கள் ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த மாணவியின் அலறல் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக டிவியின் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து வந்த மாணவி தன் பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வாலிபர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.