
இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை கொடுத்து வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்ற பலரும் தங்களுடைய முதல் எரிவாயு சிலிண்டர்க்கு பிறகு மாற்று சிலிண்டர் பெறாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, முதல் சிலிண்டர் வாங்கிவிட்டு இன்னும் இரண்டாவது சிலிண்டரை நீண்ட காலமாக வாங்காமல் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் 15 நாட்களுக்குள் தங்களுடைய ஆதார் அட்டை எண்ணோடு இ-கேஒய்சி யை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்களின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.