
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான www.passportindia.gov.in போலி இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. www.indiapassport.org, www.online-passportindia.com, www.passportindiaportal.in, www.passport-india.in மற்றும் www.applypassport.org ஆகியவை போலியான இணையதளங்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை கண்காணிப்பதற்கு பிரத்தியேக செயலி அல்லது இணையதளம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் பயனர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்கவும் விண்ணப்பிக்கவும் அதிகாரப்பூர்வ இணையதளமான என்பதை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.