
அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக தன்னை நியமித்த எடப்பாடி பழனிசாமிக்கு நடிகை காயத்ரி ரகுராம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்..
அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராமை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அண்மையில் அதிமுகவில் இணைந்த நிலையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இந்த அறிக்கையை டேக் செய்து, தனது எக்ஸ் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழகத்தை நடத்திச் செல்லும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அய்யா அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்” என தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக… pic.twitter.com/fI2z6xBtpz
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) March 2, 2024