அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி திடீரென்று அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த 17ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஜிகே மணி மற்றும் அவருடைய மகன் தமிழ் குமரன் சந்தித்த நிலையில் தன்னுடைய உறவினர் வீட்டு இல்ல திருமண விழா அழைப்பிதழை அவருக்கு வழங்கினார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடையும் நிலையில் தற்போது ஜிகே மணி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.

அதாவது அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 6 எம்பிக்கள் சீட் காலியாக இருக்கும் நிலையில் இதில் 4 சீட் திமுக கட்சிக்கும் ஒரு சீட் அதிமுக கட்சிக்கும் மற்றொரு சீட் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்தும் பெற இருக்கிறது. இந்த நிலையில் தான் அன்புமணி ராமதாஸின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஜிகே மணி சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது.