
எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக முதலமைச்சராக ஆவார் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். திமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கண்டிப்பாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார் எனவும் அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனை தற்போது டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி தொடர்ந்தால் கண்டிப்பாக தேர்தலில் படுதோல்விதான் மிஞ்சும்.
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சி காணாமல் போய்விடும். அதன் பிறகு அரசியல் களத்தில் இருந்து அதிமுக என்ற ஒரு கட்சியே அப்புறப்படுத்தப்பட்டு விடும். அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி நிச்சயம் வெல்லாது. எடப்பாடி பழனிச்சாமையால் கனவில் மட்டும் தான் முதல்வராக முடியும். மேலும் நிஜத்தில் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறினார்.