இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதை போல பான் கார்டு என்பதும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக பான் கார்டு மாறி இருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு, வாகனம் வாங்குவது விற்பது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, பங்கு சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கு, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் 50000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய, 50,000 ரூபாய்க்கு மேல் ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவைப்படும்.