
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரும் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி(26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நேற்று ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்தனர். மேலும் காதலர்கள் திருமண வயதை தாண்டி விட்டதால் இருவரையும் சேர்ந்து பாதுகாப்பாக வாழுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.