பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் தலைவர் பதவியில் 3 வருட கஷ்டங்களுக்கு பிறகு தான் அமர்ந்துள்ளேன். நான் தற்போது எதற்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். எனக்கு அரசியலில் இருக்கணுமா என்ற எண்ணம் தோன்றுகிறது. என்னால் ஒரு சாதாரண மனிதன் போல் பேச முடியவில்லை.

அதோடு எதையுமே செய்ய முடியவில்லை. என்னால் சரி தவறு என்று எந்த ஒரு விஷயத்தையும் கூற முடியவில்லை. அதன் பிறகு பாஜக என்பது தேசத்தை ஒருமைப்படுத்தும் கட்சியாகும். எந்த கட்சிக்கும் இல்லாத ஒரு ஆன்மா பாஜகவிற்கு இருக்கிறது. எனவே பாஜகவில் இணைய வேண்டும் என்றால் பொறுமை, சமரசம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய மூன்று குணங்களும் நிச்சயம் தேவை. பாஜகவை பலர் குறை கூறுவார்கள் என்பதால் அதையெல்லாம் நாம் கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் தமிழகத்தில் பாஜக வலுவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.