தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஸ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா கலந்து கொள்ளும்போது அவர் ஆங்கிலத்தில் பேசினால் அனைவருக்கும் புரியும் என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு ராஷ்மிகா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், ஆங்கிலத்தில் பேச நான் முயற்சி செய்கிறேன். ஆனால் அவர்களுடைய மொழியில் பேசவில்லை என்றால் மொழியை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் நினைப்பார்கள். இல்லையெனில் மொழியே  தெரியாமல் நடித்து விட்டேன் என்று விமர்சிப்பார்கள். மேலும் அதனால் தான் ஆங்கிலத்தில் பேசாமல் மற்ற மொழிகளில் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.