தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதோடு மாடுகள் முட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அடிக்கடி அதே புகார் மீண்டும் வருவதால் தற்போது அபராத தொகையை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி ஒருமுறை பிடிபட்டால் ரூ. 10,000 அபராதமும், அதே மாடு மீண்டும் இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ 15,000 ம் உரிமையாளருக்கு அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.