தற்போது Spider-Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமெனில் ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்தாக வேண்டும்.

என்னதான் அதீத சக்திகள் உடன் புதுப்புது சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும், ஸ்பைடர் மேனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக, ஸ்பைடர் மேனின் 4ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3ம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை அமி பாஸ்கல் தயாரிக்கவுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.