
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்..
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்கிது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பாக மேனகா உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்..
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 41 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என பிரதான கட்சிகள் தேர்தலுக்கு பரப்பரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் சுற்றுப்பயண விவரம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்கள் 24.02 2023 வெள்ளிக்கிழமை :
- சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை
- வெட்டுக்காட்டு வலசு 19 ஆவது வார்டு
- நாச்சாயி டீக்கடை – 1
- சம்பத் நகர்
- பெரிய வலசு – 2
- குளம் காந்திநகர்
- அக்ரஹாரம் வண்டி பேட்டை – 3
- சத்யா நகர்
- நெறிகல் மேடு
- வைராபாளையம்
- கிருஷ்ணம்பாளையம்
- KNK ரோடு – 4
- ராஜாஜிபுரம்
- மெட்ராஸ் ஹோட்டல்
- எல்லை மாரியம்மன் கோவில்
- முத்துசாமி வீதி
- பழனிமலைக் கவுண்டர் வீதி
- தெப்பகுளம் – 5
- சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்கள் 25.02 2023 சனிக்கிழமை
- சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகை
- டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி – 1
- சூரம்பட்டி நால்ரோடு -2
- பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங்
- தங்கப்பெருமாள் கோவில் வீதி வழியாக கள்ளுகடை கடை மேடு
- பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு
- சமாதானம்மாள் சத்திரம்
- பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம் – 3
- மண்டப வீதி வழியாக காரைவாய்க்கால்
- வளையக்கார வீதி
- இந்திரா நகர்
- கருங்கல்பாளையம்
- கோட்டையார் வீதி, ரங்கநாதர் வீதி வழியாக சின்ன மாரியம்மன் கோவில் மைதானம் – 4
- காந்தி சிலை
- மணிக்கூண்டு
- சித்திக் திடல்
- அசோகபுரி
- நேதாஜி ரோடு சென்ட்ரல் தியேட்டர்
- பன்னீர்செல்வம் பார்க் – 5 (மாலை 4 மணி)
- சக்தி சுகர் விருந்தினர் மாளிகை
