
கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பாக 16 வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவானது தொடங்கியுள்ளது. கடந்த இரண்டாம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடக்க விழாவில் பெரும்பாலான கன்னட நடிகர், நடிகைகள் யாருமே பங்கேற்கவில்லை. அந்தவகையில் நடிகை ராஷ்மிகா இந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்ததால் 10, 12 முறை அழைப்பு விடுத்தும் திரைப்பட விழாவில் பங்கேற்க நேரமில்லை என்று கூறிய ராஷ்மிகா மந்தனாவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கடுமையாக அவரை சாடியிருந்தார்.
இந்த நிலையில் உண்மைக்கு புறம்பான இது போன்ற அவதூறான கருத்துக்களை நிறுத்துமாறும், தங்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் நடிகை ராஷ்மிகா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.