தெலங்கானா மாநிலம்  உப்பல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் போலா. இவருடைய மனைவி மதுமிதா. இந்த தம்பதிகளுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமுடைய மதுமிதா எந்நேரமும்  அதிலேயே மூழ்கியிருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கணவர் பிரதீப், மனைவியை கண்டித்தும் ரீல்ஸ் செய்வதை மதுமிதா நிறுத்தவில்லையாம். இதனால்  ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் பிரதீப், மதுமிதாவை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி குளியலறையில் வைத்துவிட்டு குழந்தையோடு தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிந்த காவத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துசடலத்தை மீட்டு தற்போது அவரை கைது செய்துள்ளனர்.