
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருதினை வழங்கினார்.
இதனையடுத்து ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அஜித் குமார் பேட்டி அளித்தார். அப்போது பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். பத்மபூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இன்னும் மனதளவில் மிடில் கிளாசாக தான் என்னை உணர்கிறேன். பத்மபூஷன் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த விருதினை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இது மாதிரியான விருதுகளை வாங்கும்போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என தெரிகிறது. நான் சரியான பாதையில் தான் செல்கிறேன். என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர், எனது சகோதரிகள், ஷாலினி மற்றும் எனது குழந்தைகள்.
என்னுடைய வெற்றி தோல்வி என எல்லாவற்றிலும் அவர்கள் தான் உறுதுணையாக இருக்கிறார்கள். எனது மனைவி ஷாலினி எப்போதும் என்னுடைய தூணாக இருக்கிறார். எனக்காக நிறைய விஷயங்களை ஷாலினி தியாகம் செய்திருக்கிறார். எனக்கு வரும் எந்த அங்கீகாரமும் பெரும்பகுதி எனது மனைவி ஷாலினியையே சேரும் என கூறியுள்ளார்.