பிரபல தெலுங்கு நடிகர் தர்ஷனின் தோழி பவித்ராவுக்கு ரேணுகா சாமி என்ற 33 வயது வாலிபர் ‌ ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறி அவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை சித்ரால் ரங்கசாமி ரேணுகா சாமி தனக்கும் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பு கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து தனக்கு ஆபாச மெசேஜ் வந்த நிலையில் அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அப்போது அது ரேணுகா சாமி பயன்படுத்திய கணக்கு என்பது தெரிய வந்தது. நான் அவருடைய கணக்கை பிளாக் செய்து விட்டேன். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். நான் இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரேணுகா சாமி அனுப்பியதாக கூறிய ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் வீடியோவையும் தன்னுடைய பதிவில் அவர் இணைத்துள்ளார். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.