எனக்கும் விஜய்க்கும் இலக்கு 2026 தான் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித் தார் சீமான். அப்போது எனக்கும் விஜய்க்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு.
நாங்கள் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் நிறையவே காலம் நேரம் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகை எங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. நானும் விஜய்யும் அன்பின் பிணைப்பில் உள்ள அண்ணன், தம்பி என்று  கூறியுள்ளார்.