
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளவர்தான் நடிகை ஸ்ரீலீலா. நடனத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவ்வாறு தற்போது முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். மகேஷ்பாபு உடன் இவர் இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தில் இவருடைய நடனம் படு வைரலானது. கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா உடன் இணைந்து இவர் நடித்த திரைப்படம் தான் பகவந்த் கேசரி. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்திற்காக நடந்த விழா ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணா, 22 வயதாகும் நடிகை ஸ்ரீ லீலா இந்த படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால் படப்பிடிப்பில் என்னை மாமா மாமா என்று தான் அழைத்து வந்தார். அடுத்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என பாலகிருஷ்ணா பேசியுள்ளார்.
