
இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்று போட்டிக்கு முன்னேராமல் சிஎஸ்கே அணி ஆனது வெளியேறியது. இந்த நிலையில் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது மைதானத்திற்குள் புகுந்து தோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்துள்ளார். அவர் தனக்கு மூச்சு திணறல் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தோனியிடம் கூறியுள்ளார்.
அதற்கு தோனி, உன்னுடைய அறுவை சிகிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு எதுவும் ஆகாது .கவலைப்படாதே உனக்கு எதுவும் நடக்க விட மாட்டேன் என்று பதிலளித்ததாக கூறியுள்ளார்.