பிரேசில் நாட்டில் டிபோரா பெய்கசோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார். இவர் வயதான தோற்றத்தை தடுப்பதற்காக சரும பராமரிப்பு குறித்த டிப்ஸ் கொடுத்தார். அதற்காக அவர் முகத்தில் மலத்தை அள்ளி பூசியுள்ளார். இதனை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அவர் முதலில் அந்த வீடியோவில் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக மூக்கில் கிளிப் மாட்டுகிறார். பின்னர் மலத்தை அள்ளி பூசுகிறார். அதன் பின் அந்த ஃபேஸ் மாஸ்கை கழுவுகிறார். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது. இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே தன்னுடைய மாதவிடாய் இரத்தத்தை சரும பராமரிப்புக்காக முகத்தில் பூசினார். மேலும் இதைத்தொடர்ந்து தற்போது மலத்தை அள்ளி பூசியுள்ளார். இதனால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.