
கனேடிய குடியுரிமை பற்றி அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வரும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இந்தியா தான் எனக்கு எல்லாமே.
இந்தியா மீது தன் அன்பை நிரூபிக்கும் நோக்கில் அதை துறப்பதாக தெரிவித்து உள்ளார். நான் சம்பாதித்ததெல்லாம் இந்தியாவில் இருந்துதான். தற்போது திரும்பக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் பாக்கியம். என்னுடைய தோழன் கனடாவில் இருந்தார். அப்போது அவர் இங்கே வா என்றார். அதன்படி விண்ணப்பித்து அங்கே சென்றேன்.
அந்த நேரத்தில் எனக்கு 2 படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது எனது அதிர்ஷ்டமாகும். இதனிடையே கனேடிய பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறந்து விட்டேன். இந்த பாஸ்போர்ட்டை மாற்றவேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தற்போது அதை மாற்ற விண்ணப்பித்து இருக்கிறேன் என்று கூறினார்.