விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர் எறும்பு சாக் பீசை கடித்ததாக கூறப்படுகிறது.

அதை அவருடைய தாய் தட்டி விட்டதை தொடர்ந்து வீட்டின் சமையலறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.