
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவந்த சித்து +2 திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இந்த படத்தை தொடர்ந்து கவன், வில் அம்பு, மன்னர் வகையறா, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் வெள்ளி திரையில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சின்ன திரையிலும் சாந்தினி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாந்தினி ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது தனக்கு கிளாமர் ரோலில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அதோடு ரொமான்ஸ் கலந்த காமெடி திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் என்றும் அதுபோன்ற தனக்கு வந்ததில்லை என்றும் கூறியுள்ளார். நான் கதையைக் கேட்கும் போது கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறமாட்டேன். ஆனால் எனக்கு அதிகமாக கிளாமர் ரோல் வந்ததில்லை. எனக்கு குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. மேலும் தற்போது நான் 2 வெப் தொடர்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்