
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் மக்களை சந்தித்த நிலையில் விமான நிலையம் அமையாது என்று உறுதி கொடுத்த நிலையில் மக்களுக்காக எப்போதும் துணை நிற்பேன் என்றும் சட்டப்படி போராட்டங்களை நடத்துவோம் என்றும் கூறினார். அதன் பிறகு எதிர்க்கட்சியை நோக்கி சில கேள்விகளை முன் வைத்தார். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே தற்போது எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு அதுவே ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.? எனக்கு புரியவில்லை. நான் அம்பேத்கர் திடலில் பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்த நிலையில் எனக்கு அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதேபோன்று துண்டு பிரச்சாரம் வினியோகம் செய்ததற்கும் கைது செய்தார்கள்.
அதற்கான காரணமும் எனக்கு புரியவில்லை. நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களுடன் இருப்பதும் நிற்காமல் இருப்பதும் நாடகமாடுவதும் நாடகமாடாமல் இருப்பதையும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் மக்கள் உங்கள் நாடகத்தை பார்த்து சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் கில்லாடிகள். விமான நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த இடத்தில் விமான நிலையத்தை தாண்டி ஆளும் கட்சிக்கு வேறு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது என்று கூறினார். மேலும் அரிடாபட்டி எப்படியோ அதேபோன்றுதான் ஏகனாபுரமும். எனவே டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அதே நிலைப்பாட்டை தற்போது ஆளும் கட்சி இந்த விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்