
உலகில் யாருக்கும் இல்லாத வகையில் தனக்கு பெரிய உதடுகள் வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரே நாளில் சுமார் 6 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த ஆண்டிரியா இவானோவா என்ற பெண் தனது வினோதமான ஆசையால் இயல்பான உதடுகளை விகாரமாக மாற்றியுள்ளார்.
இதற்காக 21 லட்சம் ரூபாய் வரை அவர் செலவழித்த நிலையில் அழகுக்காக செய்த மாற்றத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் விளைவாக தன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை எனவும் பெரிய உதடுகள் இருப்பதால் யாரும் தன்னிடம் நெருக்கமாக கூட பழகுவதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க