
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காத விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்ததை சுட்டி காண்பித்தார். கடந்த 4 வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை பார்க்கும்போது எனக்கு இப்போதே முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த நான்கு வருடங்களில் ஆளுநர் தரப்பும் எதிர்தரப்பும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக தான் நடத்துகிறார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவர் எழுந்து நிற்க முயற்சி செய்த நிலையில் திடீரென தடுமாறி கீழே விழ உடனடியாக உதயநிதி ஸ்டாலின் உட்பட அங்கிருந்த அமைச்சர்கள் துரைமுருகனை பிடித்து விட்டனர். இதைத் தொடர்ந்து அவரை கைத்தாங்கலாக இருக்கையில் அமர வைத்தனர். அவர் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் அவையில் இல்லை. சிறிது நேரம் கழித்து தான் வந்தார். மேலும் அவைக்கு வந்த உடன் அவர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.