
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. பலர் போலியாக வரும் அழைப்புகளை நம்பி பணத்தை இழந்து ஏமாறுகிறார்கள். அந்த வகையில் தற்போது வங்கியில் மேனேஜராக பணிபுரியும் ஒருவர் விவசாயியை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள மஸ்தூரி நகரில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேனேஜர் விவசாயி ஒருவரிடம் 12 லட்சம் ரூபாய் லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவரிடம் வாரம் ஒரு நாட்டுக்கோழியை லஞ்சமாக கேட்டுள்ளார். இதை நம்பி வாரத்திற்கு ஒரு நாட்டுக்கோழியை விவசாயி கொடுத்த நிலையில் மொத்தம் 900 கோழிகளை கொடுத்துள்ளார்.
மொத்த கோழிகளையும் வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்ட வங்கி மேனேஜர் லோன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அந்த விவசாயி ஒரு கோழி பண்ணை நடத்தி வருகிறார். அவருடைய பெயர் ரூப்சந்த் மன்ஹர். இவர் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக லோன் கேட்ட நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கிட்டதட்ட 39 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 900 கோழிகளை வாரந்தோறும் சனிக்கிழமை வாங்கி அவர் சமைத்து சாப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயி மேனேஜர் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் தனக்கு நீதி கிடைக்காவிட்டால் காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.