
நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற பெயரில் தொடராக எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது சோனாவிற்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பெப்சி யூனியனில் நடிகை சோனா சமீபத்தில் புகார் அளித்திருந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் வடபழனில் உள்ள பெப்சி அலுவலக வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் வேறு வழியில்லாமல் பெப்சி முன் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி என்னை ஒரு மேனேஜர் ஏமாற்றி விட்டார்.
அதனால் நானே படத்தை எடுக்கலாம் என்று பார்த்தேன் முடியவில்லை. பெப்சிக்கு வந்தேன் மாற்றி மாற்றி அங்குமிங்கும் அலைய விட்டார்கள். என்னை ஏமாற்றியவர் எல்லா டெக்னீசியன்களுக்கும் அட்ரஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறது, இரவு வந்து கதவை தட்டறது, மிரட்டுவது என தொடர்ந்து நடத்தி வருகிறார். கொடுத்து பணத்தை மீண்டும் தருமாறு மிரட்டி வருகிறார்கள். வேறு வழியில்லாமல் பெப்சி யூனியனில் வந்து அமர்ந்துள்ளேன். இங்கு சங்கர் வந்தாக வேண்டும் என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க்கும் என் பணமும் வேண்டும் என்று கூறியுள்ளார்.