
எக்ஸ் என்னும் ஊடகமானது ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தியது. இந்த ஷோவில் “முதலாளியிடம் வேலை செய்பவர்கள் விசுவாசமாக மற்றும் மரியாதையாகவும் இருக்கிறார்களா” என்று பார்ப்பதற்காக நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் உணவகம் ஒன்றில் பணிபுரியும் பணியாளர்களிடம் கட்டுக்கட்டாக பணத்தைக் காட்டி இதை வாங்கிக்கொண்டு உங்களது வேலையை உடனடியாக விட்டு விடுவீர்களா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்தப் பணியாளர் என்னால் முடியாது என்று பதில் அளித்துள்ளார். அந்தப் பணியாளரிடம் காட்டிய பணத்தின் மதிப்பு சுமார் ரூ.83 லட்சமாகும். இதனால் இந்த ஷோவை நடத்தியவர்கள் அந்தப் பணியாளரை ஊக்குவிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர். இந்தக் காட்சியை எக்ஸ் வலைதளத்தில் வெளியிடபட்டுள்ளது. இதனை சுமார் 1.5 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.