
தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, காதல் கவிதை, என் சுவாச காற்றே போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் இஷா கோபிகர். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவருக்கு 18 வயது இருக்கும் போது செயலாளர் மற்றும் ஒரு படத்தின் நடிகர் பாலியல் தேவைக்காக அவரை அணுகியுள்ளனர்.
அப்போது இஷாவிடம் அவர்கள் நட்புடன் நடிகர்களுடன் பழகினால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அப்போது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாததால் நான் அனைவருடனும் நட்பாக தான் பழகுவேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று அவருக்கு 23 வயது இருக்கும்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஒருவர் ஓட்டுநர் மற்றும் மேளாளர் யாரும் இல்லாமல் தனியாக வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர் மீது பல நடிகைகளுடன் தொடர்பு குறித்த சர்ச்சைகள் இருந்தது. இதனால் நான் தனியாக செல்ல மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். அதோடு ஏக்தா கபூர் சில அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இஷா கோபிகர் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.