
விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு பாமக, திமுக, நாதக ஆகிய 3 கட்சிகள் மட்டும் போட்டியிடுவதன் காரணமாக மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் இத்தனை நாட்களாக நடைபெற்று வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த தொகுதி மக்களிடையே பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பேசிய பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் உளறிக்கொட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முதலில் தனக்கு 35 வயது எனக்கூறிய அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் பெயரை சொல்ல முடியாமல் உளறியுள்ளார்.