
உலகின் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா தான். அங்கு அரசின் தணிக்கைக்குப் பிறகு செய்திகள் அனைத்தும் வெளியாகும். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் பல வினோத சட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களை அந்நாட்டு மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா அதிபர் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் தன் மகளின் பெயரான ஜூ ஏ என்பதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை விதித்துள்ளார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள் உடனடியாக அதனை மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் வடகொரியா மக்கள் செய்வதரியாது திகைத்து வருகின்றனர். மேலும் வடகொரிய மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடி பேர் அதிபர் கிம் பெயரை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.