ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. கூட்டு குடும்பமாக வாழ்ந்த இவர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினை  காரணமாக ஷர்மிளா அவருடைய கணவர் வேலை பார்க்கும் ஊரில் வாழ்ந்து வந்தார். பின்னர்  பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை தன்னுடைய கணவரும் குடும்பத்தினரும் நேரில் பார்க்கவலில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு பரமக்குடி கோட்டில் சர்மிளா வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் நாகேந்திரன் விடுமுறையில் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது கோர்ட் மூலம் அனுப்பப்பட்ட சம்மன் கிடைத்ததால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் சம்பவத்தன்று இரவு கையில் அரிவாளோடு தன்னுடைய மனைவி வீட்டிற்கு சென்று அவரோடு சண்டை இட்டு தான் வைத்திருந்த அரிவாளால் சரா மாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் நாகேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.