புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக ஏதோ சில பிரச்சனை காரணமாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி தன்னுடைய காதலனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீ என்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் பயந்து போன அவருடைய காதலன் உடனடியாக தன் காதலி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அவர் உள்ளே சென்று பார்த்தபோது புவனேஸ்வரி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் புவனேஸ்வரியை உடனடியாக கீழே இறக்கினார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த அருள் வினித் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு ‌ மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர்  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.