ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் லக்னோ அணியானது நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20  ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்து. இதன்பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியானது 7 விக்கெட் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணியானது கொல்கத்தா அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது நிக்கோலஸ்  பூரனுக்கு  வழங்கப்பட்டது.

இதன் பிறகு அவர் அளித்த பேட்டியில், நீங்கள் எப்படி எளிதாக சிக்ஸர் அடித்து அதிரடியாக விளையாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்த கேள்வி என்னிடம் லட்சம் முறை கேட்கப்பட்டுவிட்டது. எதற்காக நான் நிறையவே பயிற்சி செய்தேன். மேலும் எனக்கு இயற்கையாகவே அது வருகிறது. எப்படி செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் போல வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வரும் வாய்ப்புகளை நான் தொடர்ந்து மகிழ்ச்சியாக ரன்களை குவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.