சிங்கப்பூரை சேர்ந்த பிரபல உணவுப்பதிவாளர் கால்வின் லீ என்பவர் வாத்து முட்டையில் ஐஸ்கிரீம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் புது விதமான உணவுகளை உருவாக்கி அதன் சுவையை பரிசோதிக்கும் வீடியோ பரவலாக வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.

இதை சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல உணவு பதிவாளர் கால்வின் லீ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் உப்பு சேர்த்து முட்டை ஐஸ் கிரீமை செய்வது எப்படி என்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும்  அவர் இந்த வாத்து முட்டை ஐஸ்க்ரீம் சுவையாக இருப்பதாகவும் இதை அனைவருமே ட்ரை செய்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.