
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மகிழ் திருமேனி அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த பேட்டியில் மகிழ் திருமேனி கூறுகையில், விடாமுயற்சி படத்தில் அஜித் அவர்களுக்கு பிரம்மாண்டமான அறிமுகம் கிடையாது என்று கூறியுள்ளார்.
அதோடு அஜித் அவர்களுக்கு படத்தில் எந்த ஒரு பஞ்ச் டயலாக்கும் இருக்காதாம். மேலும் படத்தின் இன்டர்வெல்லுக்கு எந்த ஒரு பில்டப்பும் கொடுக்கவில்லை என்று கூட மகிழ் திருமேனி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.