2004-14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக நிதியை வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

உதாரணமாக தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தனது அரசு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதிய வழங்கி உள்ளதாக பிரதமர் கூறினார்.

பொருளாதார அளவுகோல் என்பது முந்தைய ஆண்டுகளை விட நடைபாண்டில் நிச்சயம் அதிகமாக தான் இருக்கும்.

முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரை கேட்டால் கூட இதை சொல்வார், ஜிடிபி, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாக தான் இருக்கும்.

எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த ஜிடிபி செலவீனத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதே முக்கியம் என கூறியுள்ளார்.