சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, உணவுப் பழக்கங்களைப் பற்றிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் இளநீர் விற்பனையாளரிடம் லேஸ் பேக்கெட்டுக்குள் நேரடியாக தேங்காய் நீர் ஊற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார். வியாபாரியும் அதனை ஏற்று, “100 ரூபாய் ஆகும்” என கூறி உடனடியாக செயலில் இறங்குகிறார்.

முதலில் லேஸ் பேக்கெட்டை வெட்டி திறந்த விற்பனையாளர், பின் ஒரு பசுந் தேங்காயை உடைத்து அதிலிருந்து நீரை எடுத்து சிப்ஸ் இருக்கின்ற பாக்கெட்டுக்குள் ஊற்றுகிறார். இதனுடன் மேலாக மென்மையான தேங்காய் நீரை சேர்த்து, அந்த வித்தியாசமான கலவையை வாடிக்கையாளரிடம் வழங்குகிறார். அதனை கையிலே எடுத்த வாடிக்கையாளர், உடனே ருசி பார்த்து ‘சூப்பரா இருக்கு’ என பாராட்டு தெரிவிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rajbhar Ji (@swadkediwane)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் இந்த முயற்சியை புதிய ‘ட்ரெண்ட்’ என பாராட்டுவதுடன், சிலர் இது அருகில் கூட முடியாத அபூர்வ கலவை என கேள்வி எழுப்புகின்றனர். “இது சுகாதாரத்திற்கு பாதுகாப்பா?” என்ற விவாதமும் துவங்கி உள்ளது. ஆய்வுமிக்க பார்வையாளர்கள், உணவுப் பொருட்களின் இயற்கை தன்மையை மாற்றுவது தவறான பழக்கமா அல்லது புதிய முயற்சியா என்பதை எடுத்துரைத்து வருகின்றனர்.