
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக வாயில் பற்களே இருக்காது. ஆனால் பிறந்த பெண் குழந்தையின் வாயில் 32 பற்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் வசிக்கும் பெண் நிகா திவா.
இவர் தனக்கு பிறந்த குழந்தையின் அபூர்வ நிலை குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். 32 பற்களுடன் பிறந்த இந்த குழந்தையை இது மருத்துவ அறிவியலில் ‘நேட்டல் டீத்’ என்று அழைக்கப்படுகிறதாம். இது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.