
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சேர்ந்து போட்டியிட்ட நிலையில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டணி பிளவுக்கு அண்ணாமலை தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுவதால் அவருடைய தலைமையை அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கு பதிலாக தேசிய தலைமை புதிய தலைவரை தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணாமலை புதிய தலைவருக்கான ரேசில் தான் இல்லை என்று கூறியுள்ளார்.
அதே சமயத்தில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளரான முருகானந்தத்தை புதிய பாஜக தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியான நிலையில் அதனையும் அவர் மறுத்துவிட்டார். மேலும் இதன் காரணமாக நயினார் நாகேந்திரன் தான் புதிய தலைவர் என்று கூறப்படுகிறது.
இன்று பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பிரதமர் அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நிலையில் நைனார் நாகேந்திரன் கௌரவிக்கப்பட்டார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடைசி நேரத்தில் வந்த உத்தரவால் நைனா நாகேந்திரன் மேடையேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.